• Mon. May 13th, 2024

அணு உலைகள் வேண்டாம், அணு குண்டுகள் வேண்டாம். கிரோஷிமா, நாகசாகி சோகங்கள்..,

குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன் தினமும் ஏதாவது ஒரு போராட்டம் நடைபெறுவதும், அதற்கு காவல்துறை பாதுகாப்பு போடுவதும் அன்றாட காட்சிகளுக்கு மத்தியில்.இன்று போராட்டம் நடத்தியவர்கள் எழுப்பிய கோஷம்.

அணு உலை வேண்டாம், அணு குண்டுகள் வேண்டாம், கிரோஷிமா, நாகசாகி சோகங்கள் நமக்கு வேண்டாம் என்று கோஷம் எழுப்பி போராடியவர்கள், விரல் விட்டு எண்ணும் அளவிலான ஆண்களும், பெண்களும் தான் என்றாலும், கோரிக்கை என்பது அணு குண்டுகள் புதைக்கப்படும் அணுக் கழிவுகள் உண்டாக்கும் பாதிப்பும் அதிகம் அல்லவா என்ற அச்சம் ஏற்படவே. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டம் முடிவடைந்ததும்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தெற்கு எழுத்தாளர் இயக்க அமைப்பின் தலைவர் திருத்தமிழ்தேவனாரிடம், அரசியல் டுடே சார்பில் வைத்த கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள்.

கூடன்குளம் அணுமின் நிலைய வளாகத்திற்குள் 3, மற்றும் 4_ஆம் அணு உலைகளின் கட்டுமானங்களோடு அணுக்கழிவு சேமிப்பு மையத்தை சேர்த்து உரிய அனுமதியின்றி, மக்கள் கருத்து கேட்பு கூட்டமின்றி, தேசிய அணுமின் சக்திக் கழகம் கட்டி வருகிறது.

தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பயன்பாடு முடிந்த அணு எரிப்பொருள் கழிவுகளை நிரந்தரமாக சேமிக்க வேண்டும்.

கூடங்குளத்தில் அணு கழிவுகளை நிரந்தரமாக வைப்பது. தமிழ்நாட்டிலுள்ள எட்டு கோடி மக்களின் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்குகிறது.அணுகழிவில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சு நமது சுற்றுச்சூழலில் தவிர்க்க முடியாத, ஒழித்துக்கட்ட இயலாத ஒன்றாகும்.

அணு குண்டுகளால் பாதிக்கப்பட்ட ஃபுகோசிமா,சொர்னோபில் போன்ற பகுதிகள் மக்கள் வாழத்தகுதியற்ற நிலமாக மாறிவிட்டன. இன்றும் 6,50,000 ஏக்கருக்கு மேலான நிலத்தை மக்களால் பயன்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு நிலம் நஞ்சு பாய்ந்த நிலமாக உள்ளது.

உலகளவில் அணு சக்திகளால் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிற நிலையில்.இந்த மோசமான திட்டம் தொடர்ந்து தமிழ் நாட்டில் ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டு வருவது கண்டனத்திற்கு உரியது.ஒன்றிய அரசு தொலைநோக்குப் பார்வையோடு இந்த பிரச்சினையை அணுக வேண்டும். கூடங்குளத்தில் அணுக் கழிவுகளை புதைப்பதை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *