• Sat. Apr 27th, 2024

ஒமிக்ரான் பி.எப்.7 குறித்து பயப்பட தேவையில்லை: நுண்ணுயிரியல் வல்லுநர்  பிரத்யோக பேட்டி

புதிய ஒமிக்ரான் வைரஸ் குறித்து தேவயற்ற பயமோ,அச்சமோ படத்தேவையில்லை என நுண்ணுயிரியல் வல்லுனர் சண்முகம் பிரத்யோக பேட்டி.

நுண்ணுயிரியல் சங்கத்தின் தேசிய இணை செயளாளர்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர்.சண்முகம் அரசியல் டுடே டாட் காம்.க்கு அளித்தபிரத்யோக பேட்டியில்…

புதிதாக உருமாற்றம் செய்யப்பட்டு சீனாவை தாக்கி கொண்டு இருக்கும் ஒமிக்ரான் BF.7 தாக்கத்தை கண்டு இந்திய மக்கள் பயமும் பீதியும் அடைந்து உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக முழு லாக் டவுன் பெற்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் வெளி வந்தனர். ஆனால் இந்தியா மார்ச். 2021 முதல் லாக் டவுன் முழுவதுமாக வெளியே வந்து கொரனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பெற்று இந்திய பாரத பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் சீரிய முயற்சியால் இரண்டு தடுப்பூசிகளை அறிமுகம் செய்து அனைத்து மக்களும் தடுப்பூசி போட வேண்டும் என்ற அற்புத நோக்கத்தை கையில் எடுத்து அனைவரையும் பாதுகாத்தனர். அதுபோல 95 சதவீதம் முதல் தடுப்பூசி பெற்று உள்ளனர். 88 சதவீதம் இரண்டாம் தடுப்பூசி போட்டு உள்ளனர். இது போக Herd Immunity என்று சொல்ல கூடிய சமுதாய நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடயே பெரிதும் ஏற்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் இது போன்ற சூழ்நிலை ஏற்பட வில்லை. அதற்கு காரணம் மூன்று ஆண்டுகள் அவர்கள் முழு கட்டுப்பாட்டோடு இருந்ததுதான் காரணம். எனவே இந்திய மக்கள் தற்போது பரவி வரும் BF .7 என்ற வைரசை பற்றி அச்சமோ, பயமோ, பீதியோ அடைய வேண்டியதில்லை.

நம் இந்தியா மிகவும் பாதுகாப்பான நிலையில் உள்ளோம். இருந்தாலும் நாம் அனைவரும் பொது இடங்களிலும், கூட்டம் நெரிசல்களில் செல்லும் போதும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். முகக்கவசம் அணிவதன் மூலம் நம் ஒவ்வொருவரின் குடும்பத்தையும், சமுதாயத்தையும் காக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் சமூக ஊடகங்களின் மூலமாக பரவும் தவறான செய்திகளை நம்பி யாரும் அச்சப்பட தேவையில்லை. ஆராய்ச்சியாளர்கள், மற்றும் அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்றி நம் இந்தியாவையும், நம் குடும்பத்தையும், சமுதாயத்தையும் காக்க முன் வருவோம் என்று அனைவரும் உறுதியேற்போம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *