• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விருதுகள் மீது நம்பிக்கை இல்லை

Byகுமார்

Nov 15, 2021

விருதுகளின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை கவிஞர் மதன் கார்க்கி மதுரையில் பேச்சு

மதுரை கோச்சடை குயின் மீரா சர்வதேச பள்ளியில் குழந்தைகள் தினத்தை யொட்டி மாணவர்களுக்கு இடையே சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மாணவர் கீதம் வெளியீட்டு விழா நடந்தது. இந்த மாணவர்கள் கீதத்தை பள்ளியின் தலைவர் சந்திரன் மற்றும் கவிஞர் மதன் கார்க்கி இசையமைப்பாளர் அனில் சீனிவாசன் ஆகியோர் வெளியிட்டனர்.

பின்னர் மதன் கார்க்கி அவர் பேசும்போது குழந்தைகள் பருவம் மிகவும் அழகானது. இந்த பருவத்தின் வாழ்க்கை முழுவதும் ரசிக்கலாம். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் போது நம் மனது மகிழ்ச்சியாகவும் இருக்கும் இணைந்து வாழ்க்கை தான் இனிக்கும் இயற்கையின் படைப்புகளில் ஒன்று தான் பறவைகள் விலங்குகள் போலவே நம் ஒரு உயிரினம் தான். விருதுகள் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. கலையில் ஒவ்வொன்றும் சிறந்ததாக என்று வெவ்வேறு நபர்கள் சூழ்நிலையில் பல்வேறு படைப்புகள் வெளிவருகின்றன, குறிப்பிட்ட ஒரு நிகழ்வு மட்டுமே இருந்ததாக கருதி விருது வழங்குவது நான் ஏற்பதில்லை.

மாணவர்கள் கீதம் உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் எழுதப்பட்டுள்ளது குழந்தைகள் முக்கியமான கருத்தை வெளிப்படுத்துவது இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் பெற்றோர்கள் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.