• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சூதாட்டத்தால் எந்த ஓர் உயிரிழப்பும் ஏற்படக்கூடாது – எடப்பாடிபழனிசாமி

ByA.Tamilselvan

Jun 11, 2022

அவரச சட்டத்தை இயற்றி ஆன்லைன் ரம்மியை தடை செய்து மக்களை காக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசர சட்டம் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில், ஆய்வுக் குழு அமைப்பதை விட்டுவிட்டு அவரச சட்டத்தை இயற்றி ஆன்லைன் ரம்மியை தடை செய்து மக்களை காக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்சியாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய சம்பவங்களால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தின் பெரும் ஆபத்தை உணர்ந்து தடை செய்ய இதை விடவா இந்த அரசுக்கு காரணிகள் தேவை?
ஆய்வுக் குழு அமைப்பதன் மூலம் இது காலம் தாழ்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது. இந்த அரசு குழு அமைப்பதிலேயே முனைப்பு காட்டுவதை விட்டு விட்டு , நிரந்தர தீர்வுகாக உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை இயற்றி, இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஓர் உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களை காக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.