• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

பீஸ்ட் படத்துக்கு “நோ” ஆடியோ லான்ச்..

Byகாயத்ரி

Mar 15, 2022

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியாகியுள்ள அரபிக் குத்து பாடல் செம ஹிட்டாகியுள்ளது, யூடியூபில் தற்போதுவரை இப்பாடல் 175 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை குவித்துள்ளது. அந்தளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் ஏதும் வெளியாகவில்லை, இதற்காக ரசிகர்கள் அனைவரும் பல நாட்களாக காத்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இம்மாதம் இறுதியில் நடக்கும் என கூறப்பட்ட நிலையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆடியோ லான்ச் நிகழ்ச்சி காரணமாகி விட கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படக்குழு ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு பதிலாக ட்ரைலர் லான்ச் நிகழ்ச்சியை துபாய்யில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.