கடந்த 11-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’! விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஆகியோர் நடித்துள்ளனர்.
காஷ்மீரில் 1990-ம் ஆண்டு வாக்கில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளங்களில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது. இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி சொந்த நாட்டிலேயே பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். தி காஷ்மீர் ஃபைல்ஸ்வணிகரீதியாக இந்தி பேசும் மாநிலங்களில் வசூலை குவித்து வருகிறது
இந்த நிலையில் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து சந்தித்தார். அப்போது படம் குறித்து பிரதமர் மோடி அவர்களை பாராட்டினார். சந்திப்புக்கு பின் பேசிய இயக்குநர் விவேக், “மோடி ஜியின், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றிய பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும்தான் படத்தை மேலும் சிறப்புறச் செய்கிறது” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய பிரதேச மாநில அரசு இந்த படத்திற்கு 100 சதவீத வரி விலக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதனை அந்த மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். “90-களில் காஷ்மீரை சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட சம்பவங்களை அப்படியே கண்முன்னே கொண்டு வந்துள்ளது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த படத்தை பெருவாரியான மக்கள் பார்க்க வேண்டும். அதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் இதற்கு வரிவிலக்கு கொடுத்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஹரியானா மற்றும் குஜராத் மாநில அரசுகள் இந்த படத்திற்கு வரி விலக்கை அறிவித்திருந்தன.
தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்க்க மத்தியப் பிரதேச காவல்துறைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பார்க்க மத்திய பிரதேச போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கான அறிவுறுத்தல் காவல்துறை தலைமை இயக்குநர் சுதிர் சக்சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.மாநிலத்தில் உள்ள எந்த ஒரு போலீஸ்காரரும் தங்கள் குடும்பத்துடன் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பார்க்கச் செல்ல விரும்பும் போதெல்லாம் விடுமுறை அளிக்குமாறு நான் டிஜிபியிடம் கூறியுள்ளேன்” என்றார்!
மத்தியப் பிரதேசத்தில் கேளிக்கை வரியிலிருந்து ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்துக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விலக்கு அளித்துள்ளார். படம் அதிகபட்சமாக மக்கள் பார்க்கத் தகுதியானதால், அதை வரி விலக்கு செய்ய அரசாங்கம் முடிவு செய்ததாக அவர் கூறினார்.