• Wed. Mar 19th, 2025

பாஜகவுடன் கூட்டணி இல்லை, அதிமுக கதவு சாத்தப்பட்டு விட்டது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Byவிஷா

Feb 7, 2024

அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ள நிலையில், இனி பாஜக.வுடன் கூட்டணி என்பதே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..,
மத்திய உள்துறை அமித்ஷா, அவர் அவரோட கட்சியோட கருத்தை சொல்லிட்டாரு. கூட்டணி கதவு திறந்து இருக்கும்னு சொல்லிட்டாரு. எங்களோட கட்சி நிலைப்பாடை பொருத்தவரை பிஜேபியோடு எந்த காலத்திலும், இப்போதும் இல்லை.. எப்போதும் இல்லை.. எந்த காலத்திலும் இல்லை என்ற ஒரு தீர்மானம் ஒரு மனதாக கட்சியில் நிறைவேற்றப்பட்டது.
கட்சியில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அன்றைக்கு கட்சி தொண்டர்களும், மக்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். எங்களுடைய நிலைப்பாட்டைப் பொறுத்தவரை பிஜேபிக்கு உண்டான கதவு சாத்தப்பட்டு விட்டது. அவங்க திறந்து வைத்திருக்கலாம், பிஜேபி வரக்கூடாது என்ற அடிப்படையில் நாங்கள் கதவை சாத்திட்டோம் என்பதே நிலைப்பாடு என தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்காக அதிமுகவுக்காக கதவு திறந்து இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்த நிலையில், ஜெயக்குமார் இந்த பதில் அளித்துள்ளார்.