• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோனியாவை சந்தித்து பேச நிதீஷ்குமார், லாலு பிரசாத் முடிவு

ByA.Tamilselvan

Sep 23, 2022

பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்கும் திட்டம் சோனியாவை சந்தித்து பேச நிதீஷ்குமார், லாலு பிரசாத் உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவிட்டு டெல்லி திரும்பி இருக்கிறார். அவரை சந்தித்து பேச எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் நேரம் கேட்டு உள்ளனர். இந்த நிலையில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் இருவரும் சந்தித்து பேச உள்ளனர். நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) மாலை இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது.. உடல் நலம் பற்றி விசாரிக்கவே இந்த சந்திப்பு நடப்பதாக கூறப்பட்டாலும், மெகா கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்கும் திட்டங்கள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.