கன்னியாகுமரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின், போக்சா குற்றத்தை தடுக்க “நிமிர்” திட்ட ம், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு. நம் ஒவ்வொருவரின் பொறுப்பு என்ற திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
போக்சா குற்றங்களை முன் கூட்டியே தடுக்க விரைவில் தொடங்க உள்ள “நிமிர்” திட்டம். இன்று பெண் காவலர்களுக்கு பயிற்சி
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின் I.P.S., பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு முதல் நான்கு மாதத்தில் நடைபெற்ற கொலை, விபத்து உயிரிழப்புகள் இந்த ஆண்டு 60 விழுக்காட்டிருக்கும் கீழ் குறைந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக நிமிர் திட்டம்:
குழந்தைகளுக்கு கோடைகால விடுமுறை விடப்பட்டிருப்பதால், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போக்ஸோ உள்ளிட்ட குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நிமிர் என்ற திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
தீவிர போக்சோ விழிப்புணர்வு பிரச்சார இயக்கம்(நிமிர்):
இத்திட்டத்தின் கீழ், நியமிக்கப்பட்ட பெண் காவலர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரப்புற கிராமப்புறங்களுக்கு சென்று தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திட்டத்தின் நோக்கம்:
ஒரே ஒரு பெற்றோர் மட்டும் இருக்கும் குழந்தைகள், கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களின் குழந்தைகள், முன்பாக போக்சோ குற்றங்கள் அதிகமாக நடந்த இடங்கள் இலக்காக நிர்ணயித்து இப்பிரச்சாரம் தீவிர படுத்தப்படும்.

நிமிர் பெண் காவலர்களுக்கு பயிற்சி:
இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பெண் காவலர்களுக்கு நேற்று (21-04-25 )மாவட்ட ஆயுதப்படையில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பயிற்சியினை தொடங்கி தொடங்கி வைத்து திட்டத்தை நோக்கம் பற்றி விவரித்தார்கள்.
பயிற்சியாளர்கள்:
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், தடைய அறிவியல் உதவி இயக்குனர் மினிதா,சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எவர்லின் சுபா, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மஞ்சு, ADP ஜீவா, APP பாலகிருஷ்ணன், இளம் சிறார் நீதி குழும உறுப்பினர்கள் ஜாஸ்மின் மற்றும் தங்க ஜமீலா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.