• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

NEXT GEN FUN FAIR இணைய விளையாட்டுகள் விழா..!

BySeenu

Nov 29, 2024

கோவை எஸ்.எஸ்.வி.எம் ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் பள்ளி வளாகத்தில் NEXT GEN FUN FAIR இணைய விளையாட்டுகள் விழா துவங்கியது.
கோவை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனம், கோவை விழாவுடன் இணைந்து, புதுமை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கைத் தடையின்றி ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக NEXT GEN FUN FAIRப்என்னும் டிஜிட்டல் விளையாட்டு விழாவினை நடத்துகிறது. இந்த கண்காட்சி, கோவை சிங்காநல்லூரில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுவேதா சுமன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் எஸ்.எஸ்.வி.எம்  நிறுவனங்களின் நிறுவனர் மணிமேகலை மோகன் மற்றும் நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கண்காட்சியானது ம் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும், 30 மற்றும் டிசம்பர் 1 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.