அக்சர் என்றால் அழியாதது என்ற பொருள்படும் இந்த கப்பல் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தில் முழுவதும் இந்தியா நாட்டின் தற்சார்பாக உருவாக்கப்பட்ட கப்பல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கோவா ஷிப் யார்டு லிமிடெட் நிறுவனம் தயாரித்த இந்த கப்பல் 51 மீட்டர் நீளம், 320 டன் எடை, இரண்டு 3000 KW டீசல் என்ஜின்கள், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் 2800 கிலோ மீட்டர் தொலைவை கடக்கும்
நவீன ஆயுத வசதிகளும், தானியக் கட்டுப்பாட்டு அமைப்புகளும், 30 மிமீ துப்பாக்கி, இரண்டு 12.7 மி.மீ இயந்திர துப்பாக்கிகள் கப்பலில் அமைக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபடும் இந்த கப்பல் மூலம் எளிமையாக மீட்பு பணிகளையும், கடத்தலை தடுக்கவும் முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது.

கமாண்டர் சுபேந்து சக்ர போர்டி தலைமையிலான, 5 அதிகாரிகளும், 33 படையினரும் இந்த கப்பலில் பணியாற்ற உள்ளனர்.
காரைக்கால் அதானி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், இந்திய கணக்கு சேவையின் அதிகாரியுமான தீப்தி மோகில் சாவ்லா, பாதுகாப்புத் துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் டானி மைக்கேல் மற்றும் மந்திய, மாநில அரசின் உயர் அதிகாரிகள், நாகை மட்டும் காரைக்கால் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.