• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க புதிய திட்டம்..

ByA.Tamilselvan

Aug 20, 2022

காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறப்பு பாலிசி புதுப்பிப்பு திட்டத்தை, எல்.ஐ.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 17-ம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு பாலிசி புதுப்பிப்பு திட்டம், வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும், கடைசி பிரீமியம் செலுத்தி 5 ஆண்டுகள் வரை ஆன பாலிசிகளை தவிர அனைத்து பாலிசிகளையும் இத்திட்டத்தின் கீழ் புதுப்பித்துக் கொள்ளலாம்.
மூன்று லட்சம் வரையிலான நிலுவைத் தொகை இருந்ததால் 25 சதவீதமும், அதற்கு மேல் இருந்தால் 30 சதவீதமும் தாமதக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.
மைக்ரோ இன்சூரன்ஸ் திட்டங்களுக்கான தாமத கட்டணத்திற்கு 100 சதவீதம் சலுகை வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.