• Fri. May 3rd, 2024

புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தற்காலிக நிறுத்தம்..!

Byவிஷா

Jan 22, 2024

தமிழக அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு, ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்தனி ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து வருவதால், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே தமிழக அரசு சார்பாக சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதாவது தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அரசின் சலுகைகளை பெற ஒரே குடும்பத்தில் உள்ளவர்களே தனித்தனி ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து வருகின்றனர்.
இவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு மூன்று ரேஷன் கார்டுகள் இருக்கும் நிலையில் அனைவருக்கும் தமிழக அரசு சார்பாக நிதி உதவி வழங்க முடியாது. எனவே புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டு வழங்குதல் மட்டுமல்லாமல் பழைய ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தல் பணிகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *