தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஜனவரி21 நாளை முதல் ஜனவரி 25 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.