• Wed. Mar 19th, 2025

ராமர்கோவில் பிரதிஷ்டை விழா : தமிழகத்தில் பகுதியாக விடுமுறை..!

Byவிஷா

Jan 22, 2024

அயோத்தி ராமர்கோவிலில் இன்று பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகள், அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கு இன்று அரைநாள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத்துறை வங்கிகள், அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் ஆகியவை தமிழகத்தில் அரை நாள் செயல்படாது. மதியம் 2.30 மணிக்கு மேல் இவை அனைத்தும் இயங்க தொடங்கும். மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் இன்று முழு நாளும் இயங்காது. பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.