• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

புதிய ரயில் பாதை திட்ட பட்ஜெட் அண்ணாமலை உறுதி.., கேஎஸ் அழகிரி காட்டம்… 

ByNeethi Mani

Dec 13, 2023

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள சோழமாதேவி கிராமத்தில் உள்ள முன்னாள் மயிலாடுதுறை எம்பி குடந்தை ராமலிங்கம் சிலை திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ராஜேந்திரன், தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  லோகநாதன், கலாவல்லி மற்றும் சரவணன் ஆகியோர்  முன்னிலை வதித்தனர். முன்னதாக அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் வரவேற்றார். எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன், கும்பகோணம் மேயர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் முன்னாள் எம்பி குடந்தை ராமலிங்கத்தின் மகளும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்ட பிரிவு துணைத் தலைவர் பிரியா என்கின்ற சௌமியா நன்றி தெரிவித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கலந்துகொண்டு குடந்தை ராமலிங்கம் சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் எம்பியும் தேசிய தலைவர் ஆன குடந்தை ராமலிங்கம் இந்திய அரசியலில் ஜனநாயக இடத்தில் அசைக்க முடியாத 20 ஆண்டுகாலம் அரசியல் வாழ்க்கை நடத்தியுள்ளார். காந்தி குடும்பத்தில். இந்திரா காந்தியிடம் நெருக்கமாக நம்பிக்கையானவராக ஒரு மகனாக காட்சியளித்தார். இந்திரா காந்தி பதவியில் இல்லாத போது பல்வேறு போராட்டங்களில் பலமுறை காவலர்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் போது இந்திரா காந்தி நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறும் அளவிற்கு கட்சிப் பணியாற்றியுள்ளார் அவர் சிலையை திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  99 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ள காஷ்மீரில், அனைவரும் இந்தியாவுடன் இணைய விரும்பினர். காரணம் அவர்கள் காந்தி மற்றும்இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து இருந்தனர். இதனால்  இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று அன்றைய நிலையில்  நேரு சிறப்பு அந்தஸ்து கொடுத்தது சரி. உச்ச நீதிமன்றம் சிறப்பு அந்தஸ்து கொடுத்தது  தவறு என்று கூறவில்லை. சென்னையில் ஏற்பட்டது சாதாரண மழை வெள்ளம் அல்ல இயற்கை பேரிடர். மிகப்பெரிய புயலானது   சென்னையில் சுற்றியே 17 மணி நேரம் இருந்து, மழை பெய்துள்ளது, இதே போல் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மழை பெய்தால் தாங்காது. ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடாததால் ஏரி உடைந்து தண்ணீர் வந்தது சென்னை மூழ்கியதற்கு காரணம். முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மம்தா பானர்ஜி கட்சியின் பெண் என்பியான  மோய்தாராவை மோடி பதவி நீக்கம் செய்துள்ளது ஜனநாயக படுகொலை. இதுவரை எம்பி கல் தங்களது பகுதி மக்கள் அல்லது அதைப் பற்றி அறிந்தவர்கள், சாதக பாதகங்களை கேட்டு தெரிந்து ஆராய்ந்து அதைப்பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவார்கள், மொய்தாரா அதானி தொழில் அவர் வாங்கிய கடன் அவர்கள் செய்யும் தவறுகள் போன்றவற்றை கேட்டு தெரிந்து கொள்வது தவறா, மோடியை பற்றி  விமர்சித்தால், நாடாளுமன்றம் கேட்கிறது. ஆனால் அதானி பற்றி பேசியதால் பதவி நீக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தை மோடி நடத்துகிறாரா அதானி நடத்துகிறாரா, பிஜேபி நான்காயிரம் கோடி  மழை வெள்ளத்திற்கு செலவு செய்தீர்கள் மீதி பணம் எங்கே என்பது கேட்கிறார்கள், அப்படியானால் பிஜேபி செய்துள்ள திட்டங்கள் தேஜஸ் விமானம் தேசிய நெடுஞ்சாலை ஆயுதங்கள் வாங்கியது உட்பட அனைத்தும் பாதிப்பணம் கொடுத்தீர்களா, மாநில அரசை முதல்வரை பார்த்து கொச்சையாக கேட்கலாமா கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு கேட்ட ஐந்தாயிரம் கோடியை ஏன் அண்ணாமலை டெல்லிக்கு சென்று நடையாய் நடந்து வாங்கித் தர வேண்டியதுதானே, கடந்த மாதம் 15 ஆம் தேதி ஜெயங்கொண்டத்தில் என்மன் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை விருதாச்சலம் ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணத்திற்கு ரயில் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். 11 வருடத்திற்கு முன் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு கடந்த 10 வருடமாக கட்டப்படாமல் உள்ளது. அண்ணாமலை அறிவித்து நடக்குமா, அது நடந்தால் நம்பலாம். அண்ணாமலை அறிவித்து என்ன நடக்கும் எதுவும் நடக்காது என்று கூறினார். உடன் மாவட்ட பொருளாளர் மனோகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், வட்டார தலைவர்கள் சரவணன், அழகானந்தம், திண்டுக்கல் மாவட்ட தலைவர் மணிகண்டன் வழக்கறிஞர் ராஜ்மோகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.