விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது .இங்கு மாரியம்மன் கோவிலில் புதிய உற்சவ சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

பணிகள் முடிவடைந்த நிலையில் கருவறையில் மாரியம்மன் புதிய உற்சவர் சிலை வைக்கப்பட்டது. அதற்கு பால் ,பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் ,சந்தனம், திருநீறு, உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, நடைபெற்றது .திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)