விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வெற்றிலையூரணி, வெம்பக்கோட்டை, விஜய கரிசல்குளம், கங்கரக்கோட்டை, சிவசங்குபட்டி, இ. இராமநாதபுரம், தாயில்பட்டி, சிப்பிப்பாறை, செவல்பட்டி, மடத்துப்பட்டி, எட்டக்காபட்டி, ராமுதேவன்பட்டி, உள்ளிட்ட 48 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.

இந்த ஊராட்சி மன்றங்களில் பணிபுரியக்கூடிய தூய்மை காவலர்களுக்கு குப்பைகளை அகற்றுவதற்கு துடைப்பம், தட்டுகள்,மண்வெட்டிகள், பாத்திரங்கள், உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வழங்குவதற்காக வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்கு பதிலாக பாதுகாப்பற்ற முறையில் மாடிப்படிக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பொருட்கள் சேதமடையவும், காணாமல் போவதற்கும், திருடு போவதற்கும்,வாய்ப்பு உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.