• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஐஐடியில் புதிய பட்டப்படிப்பு.. ஜன. 8க்குள் விண்ணப்பிக்கலாம்..!

ByA.Tamilselvan

Jan 6, 2023

சென்னை ஐஐடியில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு புதிய பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.சென்னை ஐஐடி யில் தொடங்கப்பட்டுள்ள இளங்கலை தரவு அறிவியல் 4 ஆண்டு பட்டப்படிப்புக்கு 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு ஐஐடி மூலமாக நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. ஐஐடி மற்றும் தாட்கோ மூலமாக வழங்கப்படும் நான்கு வார பயிற்சியின் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே போதும்.
இதில் அனைத்து வகுப்புகளும் இணையதளம் மூலமாக நடத்தப்படும். மாணவர்கள் ஒரே நேரத்தில் விருப்பப்பட்ட படிப்பை படித்துக் கொண்டே இந்த பட்டப்படிப்பை எளிதில் படிக்கலாம். ஜனவரி 8-ம் தேதிக்குள் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கட்டணம் ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-25246344 என்ற தொலைபேசி எண் அல்லது 9445029456 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.