• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

புதிய கட்டிடம் முதல்வர் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறப்பு..,

கரும்பாட்டூர் ஊராட்சி புதிய கட்டிடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஊராட்சி கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு குத்து விளக்கேற்றினார். கரும்பாட்டூர் ஊராட்சி முன்னாள் தலைவர் தங்கமலர் சிவபெருமான், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் நீல பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் காளியப்பன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தாமரை பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பாபு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.