காரைக்காலில் நகராட்சி ஊழியர்கள் புதிய சங்கத்தை நிறுவினர்.
காரைக்கால் மாவட்டத்திலுள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு என புதிய சங்கம் ஒன்று இன்று நிறுவப்பட்டது. காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் புதுச்சேரி மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் சுரேஷ், செயலாளர் முருகானந்தம் ஆகியோர் ஏற்பாட்டில் புதிய சங்கத்திற்கான பெயர் பலகை திறக்கப்பட்டு, சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சங்க பொறுப்பாளர்கள் மற்றும் காரைக்கால் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.