

ஆகஸ்ட் 20 அன்று நடைபெறும் அதிமுக மதுரை மாநாட்டிற்கு தலைமையேற்க வருகை தரும் முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்க அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
அ.தி.மு.க. மாநாட்டை இதுவரையில் நடைபெறாத அளவிற்கு மிக பிரமாண்டமான முறையில் நடத்த கட்சி நிர்வாகிகள் அனைத்து அளவிலும் ஏற்பாடு செய்து உள்ளனர். மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெற்று தொண்டர்கள் பாதுகாப்பாக வீடு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக காலை 8 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. மாநாட்டு பந்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
