மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த.. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில்முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவியர் களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து அதில் முதற்கட்டமாக 50 மாணவ மாணவியர்களுக்கு… மிஸன் எம் பி பி எஸ்.. எனும் குறிக்கோளுடன் அந்த மாணவர்களை மருத்துவபடிப்புக்கான தேர்வுக்கு (நீட்) தயார்படுத்தும் வகையில் விநாயகா இன்ஸ்டியூட் மற்றும் மதுரை ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை குழு சார்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதன் துவக்க விழா காமராஜர் சாலையில் அமைந்துள்ள சேம்பர் ஆப் கமர்சியல் நடைபெற்றது. இதில் விநாயகர் இன்ஸ்டியூட் செயலாளர் முரளி மணி ரங்கராஜ்.. ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளைகுழு நிறுவனர். குருசாமி.. போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி.. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கணேஷ் அடைக்கலம்.. ஆகியோர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு… மருத்துவ தேர்வு பயிற்சிக்கான புத்தகங்களை வழங்கினர்.

மேலும் மருத்துவ தேர்வு எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வுகளும்.. தன்னம்பிக்கைகளும் ஊட்டும் வகையில் அனைவரும் சிறப்பு உரையாற்றினார்கள். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.. நன்றி*