கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க தெற்கு மாவட்ட மாநாட்டில் பா.ஜ.க முன்னாள் இந்நாள் தலைவர்களான அண்ணாமலை , நயினார் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் மேடையில் வள்ளி கும்மி நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் பா.ஜ.க மாநாடு கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மலுமிச்சம்பட்டி நடைபெற்றது . இந்த நிகழ்வில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை , மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது வள்ளி கும்மி நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குழந்தைகள், பெரியவர்கள் என சுமார் ஆயிரம் பேர் நடனம் ஆடினர். அப்போது பா.ஜ.க, அ.தி.மு.க தலைவர்கள் பெயர்களுடன் தயார் செய்யப்பட்ட ஒரு பாடலை பாடி நடனம் ஆடினர்.

அப்போது உற்சாகம் அடைந்த நயினார், அண்ணாமலை , அரவிந்த் மேனன், AP முருகானந்தம், பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் ஆகியோர் மேடையிலேயே வள்ளி – கும்மி நடனம் ஆடினர். அப்போது தொண்டர்களும், கூட்டத்துக்கு வந்து இருந்தவர்களும் ஆர்ப்பரித்தனர்.




