திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற 23 – ந்தேதி நவராத்திரி விழா கோலகலமாக தொடங்குகிறது நவராத்திரி விழா – 9 நாட்கள் அலங்காரம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா கோலாகலமாககொண்டாடப்படுவது வழக்கம்.
அதே போல இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா வருகின்ற 23-ந் தேதி தொடங்கி . அடுத்த மாதம் அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது. நிகழ்ச்சியையொட்டி கம்பத்தடி மண்டபத்தின் வளாகத்தில் விசாக கொறடு மண்டபத்தில கோவர்த்தனாம்பிகைக்கு 9 நாட்கள்தினமும் ஒரு அலங்காரம் செய்யப்படுகிறது.

அதாவது வருகின்ற 23-ந் தேதி ராஜ ராஜேஸ்வரி அலங்காரம் 24-ந் தேதிநக்கீரருக்கு
காட்சி கொடுத்தல் அவங்காரம் 25-ந் தேதி ஊஞ்சல் அலங்காரம் 26-ந்தேதி பட்டாபிஷேகம் அலங்காரம் 27 – ந் தேதி திருக்கல்யாணம் அலங்காரம் 28-ந் தேதி தபசு காட்சி அலங்காரம் 29-ந் தேதி மகிஷாசுவர்த்தினி 30-ந் தேதி சிவ பூஜை
1-ந்தேதி சரஸ்வதி பூஜை நடக்கிறது.திருவிழா காலங்களில்.சுவாமி புறப்படக்கூடிய வாகனங்கள் யாவும் கொலு பொம்மையாக வைக்கப்படும்
வில் அம்பு எய்தல் திருவிழாவின் முக்கிய அம்சமாக வருகின்ற 2-ந் தேதி (அக்டோபர் மாதம்) வில் அம்பு போடுதல் நடக்கிறது. இதனையொட்டி அன்று மாலையில்கோவிலில் இருந்து பசுமலையில் அம்பு போடும் மண்டபத்திற்குதங்க குதிரையில் அமர்ந்து வெள்ளியிலான வில் அம்பு ஏந்தியபடி மேள தாளங்கள் முழங்கமுருகப்பெருமான் புறப்படும் நிகழ்வு நடக்கிறது. இதனை தொடர்ந்து பசுமலையில் உள்ள மண்டபத்தினை முருகப்பெருமான் வலம் வந்து நான்கு திசையிலும்எட்டு திக்குமாக வில் அம்பு எய்தல் நடக்கிறது விழாஏற்பாடுகளைகோவில் அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி,கோவில் துணை கமிஷனர் சூரியநாராயணன் அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், நாமணிச்செல்வன்மற்றும் சிவாச்சாரியார்கள்,கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.