மதுரை அமலி பதின்ம மேனிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாமின் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் ஞானசெளந்தரி சிஜசி தலைமை வகித்து, “சேவையால் மிளிர்வோம்” என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் தலைமையுரை வழங்கினார்.

விழாவில் தெரசா ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மோட்சம் சிஜசி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜோஸ்பின் ராணி ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மதுரை மேனாள் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜ்குமார் மாணவர்களை ஊக்குவிக்கும் சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து திட்ட மாணவர்கள் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து சாந்தகுமாரி “டிஜிட்டல் கல்விமுறை” என்ற தலைப்பில் பயனுள்ள கலந்துரையாடலை வழிநடத்தினார்.