மதுரை அமலி பதின்ம மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாமின் 6ம் நாள் நிகழ்வில் மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றை மோட்சம் கற்றுக் கொடுத்தார். பிறகு திட்ட மாணவர்கள் களப்பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து S.ஜான்சன் JRC ஒருங்கிணைப்பாளர் மேலூர் மற்றும் வைத்தீஸ்வரன் பாரத சாரண, சாரணியர் இயக்கம் முதலுதவிப் பயிற்சி பற்றியும், அதன் அவசியத்தையும் கற்பித்தனர். மேலும் மாஸ்டர் பிரவீன் (கராத்தே)” “தற்காப்புக் கலையும், அவசியமும்” பற்றி திட்ட மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.மாலையில் அணைக்கட்டு பகுதி வரை களப்பயணம் மேற்க்கொண்டனர்.