திருப்பரங்குன்றம் அருகே உள்ள மதுரை மன்னர் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் அனிருத் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் மாணவர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மாணவர்கள் கலந்துரையாடலின் போது அவர் கூறியதாவது: நானும் என்னுடன் கிரிக்கெட் விளையாடிய ஆரம்ப கால நண்பரும் ஆரம்ப காலத்தில் 15 சதங்கள் வரை அடித்தோம் பத்தாவது பொதுத் தேர்வு வரும் போது அந்த மாணவர் கிரிக்கெட்டில் இருந்து விலகிக் கொண்டார். காரணம் கிரிக்கெட்டில் குடும்பத்தினர் நிர்பந்தம் காரணமாக கிரிக்கெட் விளையாட வில்லை அதிகமாக வேண்டும் என்பதால் கிரிக்கெட் விளையாடவில்லை என கூறினார் இதே போல் பல குடும்பங்களின் இதே நிலைதான் உள்ளது மாணவர்கள் அதிகம் மார்க் பெற வேண்டும் நல்ல வேலையில் சேர வேண்டும் குறிப்பாக அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணங்களில் தான் உள்ளனர் வெளிநாடுகளில் இந்த மாதிரியான நிர்பந்தங்கள் எதுவும் கிடையாது.

மாணவர்களிடம் பெற்றோர்கள் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையையும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
பின்னர் மாநில மாவட்ட அளவில் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் பின்னர் மாணவர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டார்.
மன்னர் கல்லூரி விளையாட்டு துறை இயக்குனர் ராகவன் வரவேற்புரை கூறினார் . கல்லூரி முதல்வர் முனைவர் ராம சுப்பையா தலைமை உரையுடன் தலைவர் விஜயராகவன்,கல்லூரி செயலாளர் ஸ்ரீதர் துணைத்தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.