• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாட்டம் டெல்லி-கன்னியாகுமரி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நேற்று மாலை நடந்த, நிகழ்வில் டெல்லியில் இருந்து சித்த மருத்துவ தினத்தின் கொண்டாட்டமாக 22_ இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டவர்கள்.

ஆக்ரா, குவாலியர், நாக்பூர், ஐதராபாத், பெங்களூர், திருப்தி, சென்னை, புதுச்சேரி, மதுரை, திருநெல்வேலி வழியாக நேற்று மாலை. கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதிக்கு வந்த குழுவினரை செண்டை, மேளம் முழங்க மலர் மாலை அணிவித்து, இருசக்கர வாகன குழுவினரை, திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்துவ கல்லூரியின் உதவி இயக்குநர் கனகராஜ் வரவேற்று பாராட்டி பேசினார்.

இந்த நிகழ்வில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும், சாமி தோப்பு அய்யா வழி குருவும் ஆன வழக்கறிஞர் பால ஜனாதிபதியும் பங்கேற்று பயண குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

விழாவின் நிறைவாக இருசக்கர வாகன ஓட்டிகள் 22_பேருக்கும் நினைவு பரிசும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்த மருத்துவர்கள் ராஜேந்திர குமார், மாதவன், ராமமூர்த்தி உடன் பல்வேறு சித்த மருத்துவர்களும் பங்கேற்றனர்.