சி.ஏ. மாணவர்கள் என்றழைக்கப்படும் பட்டயக் கணக்காளர் மாணவர்களுக்கான தேசிய அளவிலான மாநாட்டை இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் ( ஐ.சி.ஏ.ஐ) கோவையில் 2 நாட்கள் நடத்துகின்றது.


‘அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு’ ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு ‘விதை’ (Vidh.Ai) எனும் தலைப்பில் இந்த மாநாடு கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.


இதில் பசுமை மற்றும் நீர்மேலாண்மை அமைப்பான சிறுதுளி-யின் நிர்வாக அறங்காவலரும், பிரபல பிரிக்கால் நிறுவனத்தின் தலைவருமான வனிதா மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி.ஏ.ஜி. ராமசுவாமி, கௌரவ விருந்தினராக பங்கேற்று அவருடன் சேர்ந்து இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இந்த இரண்டு நாள் தேசிய மாநாட்டில் 1300 சி.ஏ. மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வில் தொழில்நுட்ப அமர்வுகள், ஊக்கமூட்டும் அமர்வுகள், கலாச்சார நிகழ்வுகள், சிறப்பு அமர்வுகள் மற்றும் நிறைவு விழா ஆகியவை இடம்பெற்றுள்ளன.




