• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி..,

BySeenu

May 27, 2025

கோவையில் வரும் மே 28 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப்படை அணி, கப்பல் படை அணி என பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்க உள்ளதாக கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் துணை தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் ஆண்டு தோறும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் குறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் துணைத் தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,58 வது, ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் கூடைப்பந்து போட்டிகள் வரும் மே 28 ஆம் முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும்,இதில் தமிழகம்,கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வருமான வரி அணி, இந்திய கப்பல் படைய அணி, இந்திய விமானப்படை அணி என எட்டு அணிகள் பங்கேற்று விளையாட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் முதல் அணிக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூபாய் 50,000 மற்றும் மகாலிங்க கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூபாய் 20000 மற்றும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.