• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தேசிய மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு..,

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.இரா.ஸ்டாலின் இ.கா.ப., தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர், துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     உறுதிமொழி 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்.