அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் TYSPL 37 செந்துறை பால் உற்பத்தியாளர் கள் கூட்டுறவு சங்கம், மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வள அமைச்சகம் சார்பில் சிறந்த பால் உற்பத்தி மற்றும் பால் கூட்டுறவு செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் தேசிய கோபால் ரத்னா விருதில் 3 வது இடத்திற்கு தேர்வு பெற்றது.

அதனை தொடர்ந்து, கூட்டுறவு துணைப்பதிவாளர் ( பால்வளம்) ஆர்.நாராயணசாமி, கூட்டுறவுத் துறை சார்பதிவாளர் கார்த்தி கேயன், செந்துறை பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் செயலாளர் கார்த்திகேயன், பால் உற்பத்தி யாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர்,மாவட்டகலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் பொ . இரத்தினசாமியைநேரில் சந்தித்து,கேடயம் மற்றும் பரிசு தொகையான இரண்டு லட்சத்திற்கான காசோலை உள்ளிட்டவற்றை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.








