இந்திய குடியரசின் 76_வது ஆண்டு விழா நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடலில் குமரி ஆட்சியர் அழகு மீனா இந்தியாவின் மூவண்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் 76_ வது குடியரசு தின விழாவின் கொண்டாட்டமாக. குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில் இந்திய தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். குமரி ஆட்சியர் அழகு மீனா. இந்த நிகழ்வில், குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலினும் பங்கேற்று தேசிய கொடியை வணங்கினார்.

காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் குமரி ஆட்சியர் . காவல் துறையில் பல்வேறு நிலைகளில் சாதனை செய்தவர்களுக்கு பாராட்டு “மெடலை” அணிவித்ததோடு பாராட்டு சான்றிதழை வழங்கினார். அரசின் வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ம் பாராட்டு பத்திரங்களை வழங்கியவர். பொது மக்கள் பலருக்கும் அரசின் நல உதவியாக நிதி (காசோலை) வழங்கினார்.

பார்வையாளர்கள் இடத்தில் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சியின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


விழாவில் பள்ளி மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள், தீ அணைப்பு துறை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.