சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்நாடு முதல்வரும், இந்திய அரசியலில் ‘கிங் மேக்கர்’ என்ற புகழ் மனிதர், பெரும் தலைவர் காமராஜரின் பெயரில் அவரது மறைவுக்கு பின்.1976 நவம்பர் 1_ம் நாளில். திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்ட அமைப்பு. ‘காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா’. அரசியலில், ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் அமைப்பு.

காமராஜ் பவுன்டேஷன் ஆஃப் இந்தியாவின்,49_வது ஆண்டு விழா மற்றும்,50_வது ஆண்டு பொன்விழா எதிர் வரும் டிசம்பர் திங்கள் 29,30,31 ஆகிய மூன்று தினங்கள். கன்னியாகுமரியில் சி.எஸ்.ஐ. (C.S.I. Retreat and Youth Center) வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் காமராஜ் பவுன்டேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் கேரள அரசின் போக்குவரத்து துறையின் அமைச்சர் முனைவர்.எ. நீலலோகிததாஸ், தேசிய பொதுசெயலாளர் பேராசிரியர். முனைவர் கே.ஜான்குமார், வரவேற்பு குழு தலைவர் வழக்கறிஞர் பாலஜனாதிபதி,
தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர்.மனோதங்கராஜ்,கேரள அரசின்
பத்திர பதிவுத்துறை அமைச்சர்.கடந்தபள்ளி ராமச்சந்திரன், கேரள வனத்துறை அமைச்சர் எ.கே.சந்திரன், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ், குமரி மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார்,தாரகை கத்பட் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்,
தமிழக, கேரள மாநிலங்களை சேர்ந்த. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், காமராஜ் பக்தர்கள் பங்கேற்கும் மூன்று நாட்கள் விழா கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது.




