• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் நாதுராம் கோட்சே திரைப்படம் டிரெய்லர் வெளியீட்டு விழா..!

ByKalamegam Viswanathan

Jan 12, 2024

மதுரையில் இயக்குனர் வீரமுருகனின் வெற்றி படைப்பான நாதுராம் கோட்சே திரைபடம் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மதுரையில் கிடுகு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இய்குனர் வீர முருகனின் இரண்டாவது படமான நாதுராம் கோட்சே திரைப்படத்தின் டிரெய்லர் காட்சி வெளியீட்டு விழா மதுரை பாண்டிகோவில் அருகே தனியார் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் திருமாறன்ஜி, நிலையூர் ஆதீனம், மதுரை இளைய ஆதீனம், மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன், ஜான்ரவி, மருது, அழகுராஜ், உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு திரைபடம் வெற்றி பெற வாழ்த்துக்களை கூறினர்.
ரோட்டரி மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்த பாண்டி, மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பொருளாளர் எஸ் கதிரவன், அனைத்து ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சிவ சங்கர், பில்லி கிதியோன், ஆடிட்டர் சேது மாதவா, ஸ்டார் ரோட்டரி சங்க பொருளாளர் கன்னியப்பன் மதுரை மீனாட்சி ரோட்டரி சங்க தலைவர் ஜெயசீலன், கிங் சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் செல்வராஜ், ஆதவன், தொழிலதிபர் மகேந்திரன், ‘வழிகாட்டி’ சமூக செயற்பாட்டு அமைப்பு நிறுவனர் மணிகண்டன், சுப்பிரமணியன், ராஜ்குமார், கல்லூரி உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் நெல்லை பாலு செய்திருந்தார்.