பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்பதைத் தொடர்ந்து போடிநாயக்கனூர் நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
போடிநாயக்கனூர் பார்க் நிறுத்தத்தில் தொடங்கி வ உ சி சிலை வரை பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆடிப்பாடி சுமார் ஒரு கிலோ மீட்டர் ஊர்வலமாக சென்றனர்.
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறை பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் விழா நடைபெற்றது.
அதனைக் கொண்டாடும் வகையில் போடிநாயக்கனூர் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாகஆடிப்பாடி இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
போடிநாயக்கனூர் முக்கிய பகுதியான பார்க்நிறுத்தம் தொடங்கி கட்டபொம்மன் சிலை,வள்ளுவர் சிலை, தேவர் சிலை வழியாக பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வ உ சிதம்பரனார் சிலை வரை பேண்டு வாத்தியங்களுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஊர்வலம் ஆக சென்றனர்.
ஊர்வலத்தில் நடுவே பாரத் மாதாகி ஜே பிரதமர் மோடி வாழ்க என்று முழக்கங்கள் இட்டும் வான வேடிக்கைகள் வெடி வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர். பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்