• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தாய்லாந்தில் விருது பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த பிக்பாஸ் புகழ் நமீதாமாரிமுத்து..!

Byவிஷா

Jul 30, 2022

பிக் பாஸ் புகழ் நமீதா மாரிமுத்து தாய்லாந்தில் நடைப்பெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் பன்னாட்டு அரசி போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
நமீதா மாரிமுத்து ஃபேஷன், மாடலிங், சினிமா என அனைத்து துறைகளிலும் கலக்கி கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு பலரின் கவனத்தையும் பெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நமீதா மாரிமுத்துவை அனைத்து தரப்பினரும் ஈஸியாக அடையாளம் கண்டு கொண்டனர். இந்நிலையில், திருநங்கைகளுக்கான மிஸ் பன்னாட்டு அரசி 2022 (MISS International Queen 2022) போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை நமீதா மாரிமுத்து கலந்து கொண்டு, முதல் 10 இடத்தில் இடம் பெற்றது மட்டுமல்லாமல், இறுதி போட்டியில் “MISS POPULAR VOTE OF THE WORLD” விருதினை பெற்றார்.
அவருக்கு தங்க கோப்பை விருதும்,”SASHES” எனப்படும் அங்கி அணிவிக்கப்பட்டது. இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். திருநங்கை நமீதா மாரிமுத்து “MISS POPULAR VOTE OF THE WORLD” விருதிற்காக பெற்ற தங்க கோப்பையினை நேற்றைய தினம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. பி.கீதாஜீவன் அவர்களிடம் தலைமைச் செயலகத்தில் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வின் போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ஷம்பு கல்லோலிக்கர், இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் திருமதி. த. ரத்னா, இ.ஆ.ப., சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் திருமதி. ச. வளர்மதி, இ.ஆ.ப., மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு இணைச் செயலாளர் திருமதி. இரா. சீத்தாலட்சுமி, இ.ஆ.ப., ஆகியோரும் உடனிருந்தனர். பல போராட்டங்களுக்கு பிறகு வாழ்க்கையில் தொடர்ந்து அடுத்தடுத்த சாதனைகளை செய்து வரும் நமீதா மாரிமுத்துவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.