• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை அமுதகலா முத்தமிழ் நாட்டியப் பள்ளியில் பயின்ற 21 மாணவிகளுக்கு நட்சத்திரா நாட்டிய சுடர் விருது..,

ByKalamegam Viswanathan

Jan 5, 2024

மதுரை கள்ளழகர் திருக்கோவிலில், ஸ்ரீ பால சரஸ்வதி கலைக்கூடம் சார்பில், மதுரை மார்கழி திருவிழா – 2023 இசைச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, கோயில் துணை ஆணையர் மு. இராமசாமி குத்து விளக்கேற்றி, துவக்கி வைத்தார். கள்ளழகருக்கு நாட்டியம் சமர்ப்பிக்கும் வகையில், 500 கலைஞர்கள் ஆண்டாள் பாசுர பரதநாட்டியத்துடன் நடனம் ஆடினர்.
இந்நிகழ்வில், கள்ளக்குறிச்சி ஸ்ரீ பாலசரஸ்வதி கலைக்கூடம் நாட்டியாலயாவின் நிறுவனர் சிறப்பாக நடனம் ஆடிய பரத நாட்டிய கலைஞர்களுக்கு விருது வழங்கினார். இதில், ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அமுதகலா முத்தமிழ் நாட்டியப் பள்ளி ஆசிரியர் இசை கலைமணி விருதுபெற்ற அமுதாவிற்கும், 21 மாணவர்களுக்கும் நட்சத்திரா நாட்டிய சுடர் விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.