தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு கிராமத்தில் நடைபெற்ற அதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்

ஆளுநர் மாளிகை மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்வதை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தது குறித்து கேட்டபோது, மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை குறை சொல்வதற்காகவும் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக ஆக்குவதற்காக மட்டுமே அவர் தமிழகத்தில் பதவி வைத்து வருகிறார். தமிழகத்தை போல் அரசு திட்டங்களுக்கு பல்வேறு பெயர்களை நாங்கள் வைக்கவில்லை. “மக்கள் மன்றம்” என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதில் என்ன தவறு இருக்கிறது.
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மத்திய அரசை குறை சொல்வதே வேலையாக உள்ளது.

செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கு முன்பாக யாரை சந்தித்து விட்டு சென்றார் என்பது உதயநிதிக்கு தெரியாதா? முதலமைச்சர் ஸ்டாலின் மூலம் சேகர் பாபு செங்கோட்டையனை சந்தித்து பேசிய பின்னரே அவர் அந்த கட்சிக்கு சென்றுள்ளார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது மக்களை குழப்புகிற வேலையை தான் உதயநிதி ஸ்டாலின் செய்து வருகிறார்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் வழியில் விஜய் செயல்படுவதாக செங்கோட்டையன் கூறிய கருத்து குறித்து கேட்டபோது, இதைவிட வேடிக்கையான விஷயம் எதுவும் இல்லை.
50 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் இவ்வாறு கூறுவது வியப்பாக உள்ளது. எம்ஜிஆரின் வழியும், கொள்கையும் வேறு, விஜயின் வழியும் கொள்கையும் வேறு இதுகூட செங்கோட்டையனுக்கு தெரியாதா? என்றார்.
தேனியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, தேனி மாவட்டத்தில் ஏற்கனவே நிறைய வேட்பாளர்கள் இருக்கிறார்கள் இதில் நானும் வந்தால் அவர்கள் என் மீது கோபம் கொள்வார்கள் என கூறினார்.








