• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் மாநகராட்சியில் மேயர் மகேஷ் ரூ.9.05 கோடி பற்றாக்குறை வரவு செலவு அறிக்கை தாக்கல்

தேர்தல் ஆணையம் கட்டுபாடுகள் காலத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மாதந்திர கூட்டம் தடைப்பட்டிருந்த பின், தேர்தல் ஆணையம் தேர்தல் கால தடைகள் நீக்கப்பட்டபின், இன்று நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வின் முதல் நிகழ்வாக மேயர் மகேஷ் நிதிநிலை அறிக்கையை( 2024_2025) தாக்கல் செய்தார். நிதி நிலை அறிக்கை புத்தகத்தை ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா பெற்றுக் கொண்டார்.

நாகர்கோவிலில் மாநகராட்சி மேயர் மகேஷ் நிதி நிலை அறிக்கை வெளியிட்டபின், கூட்டம் தொடங்குவதற்கு முன், மாநகராட்சி 42_வது வார்ட் கவுன்சிலர் பாஜகவை சேர்ந்த சரலூர் ரமேஷ்,மேயரை நோக்கி உரத்த குரலில், நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றுள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது. மேயர் மகேஷ் உடனடி பதிலாக நடந்து முடிந்த 18_வது மக்களவை தேர்தலில் தமிழகம் உட்பட, புதுவை உட்பட இந்தியா கூட்டணி 40_இடங்களில் வெற்றியை தேடித்தந்த தளபதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த மன்றம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது என்றார். உறுப்பினர்கள் அனைவரும் கை ஒலி எழுப்பி வரவேற்றனர்.

நாகர்கோவிலில் உள்ள அனைத்து வார்ட் பகுதிகளுக்கு குடி நீர் முறையாக வழங்கப்படவில்லை என்ற பெரும்பான்மை கவுன்சிலர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு மேயர் தெரிவித்த பதில், நாகர்கோவிலில் மாநகராட்சியின் 52_வார்ட் கவுன்சிலர்களும் அவரவர் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்காத இடங்களை பட்டியலிட்டு மாநகராட்சி ஆணையரிடம் கொடுக்க வேண்டும். ஆணையாளர் குடி நீர், வடிகால் வாரிய அதிகாரியிடம் அந்த பட்டியலை கொடுத்து குடி நீர் இணைப்பு வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வார், செயல்படாத வரி வசூல் மையங்கள் அனைத்தும் செயல் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் தெரிவித்தார்.மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் மேரிபிரின்சி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர், முத்துராமன், செல்வகுமார், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.