• Wed. Dec 11th, 2024

பூரி ஜகந்நாதர் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பு..!

Byவிஷா

Oct 10, 2023

பூரி ஜகந்நாதர் கோவிலில் பக்தர்களுக்கு வருகின்ற 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஜகந்நாதர் கோவில் ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ளது. கடந்த 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலினுள் கேமரா, அலைப்பேசியைக் கொண்டு செல்லவும், படம் எடுக்கவும் தடை உள்ளது.
கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் கோயிலில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அவர் கோவிலில் சிலர் “அநாகரீகமான” உடை அணிந்து வருவதால், ‘நிதி’ துணைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கோவில் நிர்வாகத் தலைவர் ரஞ்சன் குமார் தாஸ் இது குறித்து..,

“ஜகந்நாதர் கோயிலின் கண்ணியத்தையும், புனிதத்தையும் காப்பது எங்கள் பொறுப்பு. ஆனால் துரதிருஷ்டவசமாக, சிலர் மற்றவர்களின் மத உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் கோவிலுக்குச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சிலர் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட், ஸ்லீவ்லெஸ், அரைக் கால்சட்டை அணிந்து, கடல் கடற்கரையிலோ, பூங்காவிலோ உலா வருவது போல் கோவிலில் காணப்பட்டனர்.
ஒரு கோவில் என்பது கடவுளின் இருப்பிடம் தானே அன்றி பொழுது போக்கிற்கான இடம் அல்ல. எனவே எந்த வகையான ஆடைகளை அனுமதிக்க வேண்டும் என்பது விரைவில் முடிவு செய்யப்படும். பக்தர்களிடையே கோவில் நிர்வாகம் பக்தர்களிடையே ஆடைக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கும்.”