• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முத்தாரை கைது செய்ய நாடார் சங்கங்கள் ஆலோசனை கூட்டம்..,

ByK Kaliraj

Dec 26, 2025

காமராஜரை இழிவாக பேசியும் நாடார் சமுதாய மக்களை தரக்குறைவாக பேசிய முத்தாரை கைது செய்ய வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியது

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நாடார் சங்கங்கள், நாடார் மகமை சங்கம் நாடார் உறவின்முறை நிர்வாகிகள், கிறிஸ்தவ நாடார்கள் சங்க அமைப்புகள், மகாஜன சங்கம், ஆகியவை யூடியூப் சேனலில் காமராஜரை இழிவாக பேசியும் நாடார் சமுதாய மக்களை தர குறைவாக விமர்சனம் செய்த youtube சேனல் முத்தாரை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.

ஆனால் தமிழக அரசு இதுவரை அவர் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி முத்தாரை கைது செய்ய வலியுறுத்தி ஐயாயிரம் நாடார் சமுதாய மக்களை இணைத்து விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு youtube சேனலில் ரூபாய் 2 லட்சம் லஞ்சம் கேட்டார்கள் என்பதற்காக போலீசார் இரவோடு இரவாக கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் தமிழகத்தின் முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றிய காமராஜரை இழிவாக பேசிய முத்தரை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் பல நாட்களாக நடைபெற்ற போதிலும் போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

200 ஆண்டுகளாக நாடார் சமுதாய மக்கள் முன்னேற்ற பாதையில் சென்று வருகின்றனர். 150 ஆண்டுகளுக்கு முன்பு நாடார் மகமை பள்ளிகளின் மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது. மகமை படித்த காமராஜரும் கல்வி கடினம் என்பதை உணர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்றதும் தமிழகம் முழுவதும் ஏராளமான பள்ளிக்கூடங்களை உருவாக்கினார்.

நாடார் மகமை பள்ளிகள் அந்தந்த பகுதிகளை சேர்ந்த நாடார் உறவின்முறை நிர்வாகிகளால் மட்டுமே வளர்க்கப்பட்டது. காமராஜரால் வளர்க்கப்படவில்லை காமராஜரால் தான் முன்னேறியது என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் தளவாய்புரம், அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, பகுதியில் உள்ள பள்ளிகளே இதற்கு சாட்சி.

நாடார் சமுதாய மக்கள் கள்ள நோட்டு அச்சடித்தனர். எனவும் பொருட்களில் கலப்படம் செய்தனர் என வரலாற்றில் தவறாக பதிய முயற்சி செய்து வருகின்றனர். தவறான கருத்துகள் பதிவு செய்ய முயற்சி செய்பவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் வரும் சாத்தூரில் ஒன்பதாம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் அதனைத் தொடர்ந்து விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி, பகுதிகளிலும் தொடர்ந்து சென்னை கோட்டையை நோக்கியும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

போராட்டம் தீவிரமாவதற்குள் முத்தரை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது எனக் கூறினார்.

சிவகாசி நாடார் உறவின் முறை நிர்வாகிகள் மற்றும் மகாஜன சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.