• Mon. Mar 30th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

பெரியகுளம் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி..,

BySubeshchandrabose

Mar 30, 2026

தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விமலா முதல் ஆளாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக கொண்டாட்டங்களுடன் நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக வருகை தந்தனர்.

தொடர்ந்து பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரஜத் பீடன்-யிடம் வேட்பாளர் விமலா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.