• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முதல்வரையே தாக்கிய மர்ம நபர்.. மலரஞ்சலி செலுத்திய இடத்தில் பரபரப்பு..

Byகாயத்ரி

Mar 28, 2022

பலத்த பாதுகாப்பையும் மீறி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தனது சொந்த கிராமமான பக்தியார்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்றார். அவருடன் பாதுகாவலர்களும் இருந்தனர். ஷீல்பத்ரா யாஜி என்ற சுதந்திரப் போராட்ட வீரரருக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக நிதிஷ்குமார் மேடையேறிச் சென்றார். மலரஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தபோது, உள்ளூர் இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தையும் மீறிச் சென்று மேடையில் ஏறி நிதீஷ் குமாரை தாக்கியுள்ளார். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் சங்கர் வர்மா என்பதும், நகைக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இது போக தன்னை தாக்கிய இளைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிகாரிகளை கேட்டுகொண்டுள்ளார்.