• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாஜ நிர்வாகி காரை பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்கள்..,

ByP.Thangapandi

Aug 10, 2025

மதுரை மாவட்;டம் எழுமலை அருகே உள்ளது பாப்பிநாயக்கன்பட்டி கிராமம்.,இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜா.

இவர் பேரையூர் மற்றும் திருமங்கலத்தில் ஆட்டோ கண்சல்டிங் தொழில் செய்து வருகின்றார். மேலும் பா.ஜ கட்சியில் தற்போது விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றார்.

இவர் கடந்த 13.07.2025 அன்று தனது வீட்டில் இரவில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வீட்டில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது., இதையறிந்து திடுக்கிட்டு எழுந்த வீட்டின் பணியாளர்கள் வெளியே சென்று பார்த்த போது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது கார் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

உடனடியாக தீயை அணைத்து விட்டு வீட்டிலிருந்த சிசிடிவி கேமாராவை ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி எரித்து விட்டு செல்வது தெரிய வந்தது.

இது குறித்து சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் தன்னையும் தன் குடும்பத்தையும் கொலை செய்யும் நோக்கிலும் மிரட்டும் நோக்கிலும் சிலர் செயல்படுவதாக தர்மராஜாவின் மகன் யோகபிரபு டி.இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

.டி.இராமநாதபுரம் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் புகாரளித்து 25 நாட்களுக்கு மேலாகியும் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இதனால் தர்மராஜா மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு ஆன்லைனிலும் பதிவு தபாலிலும் புகார் மனு அனுப்பி உள்ளார். இம்மனு நடவடிக்கை குறித்து விசாரிக்க உசிலம்பட்டி மாவட்ட துணைக்கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.இந்நிலையில் டிஎஸ்பி அலுவவவலகத்தில் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.