இப்போது துபாய் சென்று கொண்டிருக்கிறேன் ஒரு விருது வாங்குவதற்காக. நாங்கள் ராஜ்கமல் எடுத்த அமரன் திரைப்படத்திற்கு நிறைய விருதுகள் கிடைத்திருக்கிறது. எனக்கும் தெலுங்கு படத்துக்கு விருது கிடைக்கிறது. திருப்பி டெல்லி செல்ல இருக்கிறேன்.

யாரையும் அவமானப்படுத்தும் வகையில் பேச வேண்டிய அவசியம் இல்லை என பிரதமருடைய தாய் குறித்து அவதூறு பேச்சுக்கு கமல்ஹாசன் பதில். ஓட்டு மற்றும் பெயர் காணாமல் போனது குறித்து நானே அதிக நாள் குறித்து பேசி உள்ளேன். எனது பெயரை காணாமல் போயுள்ளது. பின்னர் நான் அதை நேரில் சென்று கொண்டு வந்தேன். நானே நேரில் சென்று தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்து சேர்த்துள்ளேன்.
வெற்றிமாறன் பேச்சை நான் கவனிக்கவில்லை அதனால் கேட்டுவிட்டு சொல்கிறேன். தெருநாய் குறித்து பேசிய கமல்ஹாசன் இதற்கான தீர்வு என்பது மிகவும் எளிது. கழுதை காணவில்லை என யாரும் கவலைப்படுகிறார்களா? நமக்காக எவ்வளவு பொதி சுமந்துள்ளது. கழுதை யாரேனும் காப்பாற்ற வேண்டும் என பேசுகிறார்களா?

முதல்வரின் வெளிநாடு பயணம் தொடர்பான கேள்விக்கு ஒருத்தர் நல்லது செய்யும்பொழுது நான் என்ன கட்சி என நான் பார்ப்பது கிடையாது நாட்டிற்கு நல்லது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் வரவேற்கிறேன். அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன் இது தொடர்பாக ஒரு கட்டுரையை விரிவாக எழுதியிருக்கிறேன். அதனால் இதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்காது என தெரிவித்தார்.