திருப்பரங்குன்றம் மலை மீது நாலு இஸ்லாமியர்கள் சென்றதாக குற்றச்சாட்டு வைத்து திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதைத்தொடர்ந்து காவல்துறை தரப்பில் காவல் நிலையத்தில் மனு கொடுக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டதால் திருப்பரங்குன்றம் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக மனு அளித்தனர். தொடர்ந்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் சந்தனக்கூடு தொடர்பாக மீண்டும் பீஸ் கமிட்டி அமைத்து அதில் எங்களையும் சேர்க்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். தொடர்ந்து செய்தியாளர்களை ஊர் பொதுமக்கள் சார்பாக முத்துக்குமார் என்பவர் கூறுகையில்:

திருப்பரங்குன்றம் பூர்விக கிராமத்தை சேர்ந்தவர்கள் எங்களுக்கு 15, 20 நாட்களாக நெருக்கடி, எந்த தெருவிலும் போக, வர முடியவில்லை. பேரிக்கேடை வைத்து தடுத்து நிறுத்துகிறார்கள். உயர் நீதிமன்றத்தில் உத்தரவு வந்ததையொட்டி மலை உச்சியில் தீபத்தூரில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் கோரிக்கையாக எழுதிக் கொடுத்துள்ளோம்.
அவர்கள் செவி சாய்பவர்கள் போல் தெரியவில்லை இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்துக்கு சென்று இருக்கிறார்கள் என்று நாங்கள் அமைதியாக இருந்தோம். ஆனால் நாளை சந்தனக்கூடு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறுகிறார்கள். இஸ்லாமியர் 5 பேர் மலையில் செல்வதற்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு நாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. எங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவையான வாகனங்களை கூட மலைப்பகுதியில் அனுப்பவில்லை.
அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்து இருக்கிறார்கள், கேட்டால் நாங்கள் பீஸ் கமிட்டி போட்டோம் என்று கூறுகிறார்கள். பீஸ் கமிட்டி போட்டது எங்களுக்கு தெரியாது.

இஸ்லாமியர்கள் மேலே போய் கொடி ஏற்றுவோம் என்று சொன்னார்கள் என்றால் அங்கு இருக்கும் மரம் எங்களுக்கு உரிய மரமா, இல்ல அவர்களுக்குரிய மரமா என்ற பிரச்சினையில் தான் உள்ளது. அந்த மரத்தில் எப்படி இவர்கள் கொடியேற்ற முடியும். அதேபோல் அதற்கு பக்கத்தில் தீபத்துன் உள்ளது நாங்கள் தீபத்தூண் என்று கூறுகிறோம். அவர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் யார் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். அவர்கள் மேலே சென்று தீபத்தூணை சேதப்படுத்துவார்கள் என்று என்ன நிச்சயம்.
பீஸ் கமிட்டி நடந்து இருக்கிறது அதற்கு உங்களை கூப்பிட்டு இருக்கிறார்களா என்ற கேள்விக்கு:
இதுவரை கிராமம் சார்பாக யாரையும் கூப்பிடவில்லை.
தர்கா தரப்பில் நாங்கள் எல்லோரும் மாமன் மச்சானாக இருக்கிறோம் என்ற கேள்விக்கு:
இதுவரை நாங்கள் மாமன் மச்சான் போல்தான் இருந்திருக்கின்றோம். ஆனால் இப்போது இந்த அரசுடைய நடவடிக்கையினால் எங்கள் மனசுக்குள் வருத்தம் வருகிறது. இன்றும் நாங்கள் அவர்களை மாமா என்று தான் கூப்பிடுகிறோம். அவர்கள் எங்களை மச்சான் என்று தான் கூப்பிடுகிறார்கள். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அவர்கள் போய் மலையில் கொடியேற்றினார்கள், என்றால் எங்களுக்கு தீபம் ஏற்ற வேண்டும்
நாளை சந்தனக்கூடு நடக்கப் போகிறது அதைப் பற்றிய கேள்விக்கு:
வாய்ப்புகள் கொடுத்து விட்டால் அடுத்தடுத்த பிரச்சனைகள் வராது சமாதானமாக இருக்கலாம். நான் அமைதியாக இருப்பேன், என் கூட இருப்பவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். ஒவ்வொருத்தவரும் ஒவ்வொரு மனநிலையில் உள்ளார்கள். உதாரணத்துக்கு பார்த்தீர்கள் என்றால் பூர்ண சந்திரன் ஒரு உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு மனிதன் இருந்து இருக்கிறான் என்றால் எவ்வளவு பெரிய முருக பக்தனாக இருக்க வேண்டும் அந்த பூர்ண சந்திரன் மாதிரி நிறைய சந்திரன் இந்த ஊரில் இருக்கிறார்கள். யாரும் அந்த நிலைமைக்கு வந்துரக்கூடாது என்பதை தான் நாங்கள் விரும்புகிறோம்.
அவர்கள் நீதிமன்றத்தில் மலை முழுவதும் எங்களுக்கு சொந்தம் என்று கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு:
நாங்களும் மலை எங்களுக்கு சொந்தம் என்று சொல்கிறோம் அவர்களும் சொல்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் உறுதியான அடிப்படையில் தான் அவர்கள் தீர்வு செய்ய வேண்டும். பாதி படி எங்களுக்கு சொந்தம் என்று கூறினார்கள். ஆனால் நாங்களும் அவர்களும் சேர்ந்து தான் படியில் மேலே செல்கிறோம். நாங்கள் நினைத்தால் படியில் போகாமல் கூட தீபம் ஏற்ற முடியும். ஊர் மக்கள் நினைத்தார்கள் என்றால் எங்களால் பாறை மேல் ஏறி கூட தீபம் ஏற்ற முடியும்.
அவர்கள் எப்போது நண்பராக வந்தால் வரலாம் மத ரீதியாக வந்தால் வரக்கூடாது என்று சொல்கிறார்களோ அவர்கள் மதத்தை அவமதிக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.
அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய கேள்விக்கு:
இஸ்லாமியர் நான்கு பேர் மலைக்கு சென்றதால் தான் பொதுமக்கள் மகளிர்கள் கொந்தளித்து விட்டார்கள் துணை ஆணையர் அந்த இடத்தில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனுவாக எழுதி கொடுங்கள் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.
நாளை கொடியேற்ற அனுமதித்தார்கள் என்றால் உங்களுடைய நடவடிக்கை பற்றிய கேள்விக்கு:
பிரச்சனை நடந்து கொண்டிருக்கட்டும் என்று அவர்கள் நினைத்தால் என்ன செய்வது, பிரச்சனை வேண்டாம் என்று நாங்கள் நினைக்கிறோம் பூர்ண சந்திரன் மாதிரி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது. எங்கள் உரிமையை செய்ய விடுங்கள் அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். உங்கள் உரிமை நீங்கள் செய்யுங்கள், எங்கள் உரிமை நாங்கள் செய்கிறோம்
உள்ளூர் மக்கள் 52 கிராமங்களை ஒன்று சேர்ந்து பற்றிய கேள்விக்கு:

கிராமத்தை நாங்கள் கூப்பிட பிரியப்படுகிறோம். ஆனால் அரசியல் தடைகள் இருக்கின்றது. பொதுமக்கள் அனைவரும் விருப்பத்தோடு இருக்கிறார்கள் மேற்கொண்டு பிரச்சனை வளர்க்க வேண்டாம் நாம் உள்ளூரில் இருப்பவர்கள் பிரச்சனையை கூறுவோம் எல்லாத்தையும் கூப்பிட்டோம் என்றால் இது பெரிய பிரச்சனையாக மாறிவிடும் நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் உத்தரவை நடைபெறுவதற்கு என்ன சிரமம்.
இதை மீறி அவர்கள் மேலே சென்றார்கள் என்றால் நாங்கள் மலையை மரித்து அனைவரும் உட்கார்ந்து போராட்டம் நடத்துவோம். இந்து அறநிலைத்துறை எங்கள் உரிமையை பறித்துக் கொண்டிருக்கிறது. இந்துத்துவத்தை எதிர்க்க வேண்டும் என்ற இந்த அரசின் நோக்கம், இந்த அரசியல் பூச்சாண்டி உள்ளூர் மக்களிடம் நடக்காது.




