• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் விழா மற்றும் நூற்றாண்டில் நிறைவு பெருவிழா

ByG.Suresh

Jun 2, 2024

சிவகங்கையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட திமுக அயலக அணி சார்பில் மாபெரும் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாமினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் துவக்கி வைத்தார்.

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் திமுக அயலக அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டில் நிறைவு பெருவிழாவை முன்னிட்டு மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. திமுக அயலக அணி மாவட்ட தலைவர் கேப்டன் சரவணன் தலைமையிலும், சிவகங்கை நகர் மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான துரை. ஆனந்த் முன்னிலையில், நடைபெற்ற இம்முகாமினை, கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.

இதில் சிவகங்கை நகர், காஞ்சரங்கால், டி.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான முதியோர்கள் தங்களது கண்களை ஆர்வத்துடன் வந்து பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளும், தேவையானவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக முன்னதாக முன்னாள் முதல்வர் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இம்மருத்துவ முகாமில் மாவட்ட திமுக நகர்மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன், சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ஜெயகாந்தன், விஜயக்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் கிங் கார்த்திக், சுற்றுச்சூழல் அணி குமணன், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர். அமிர்தா தலைமையிலான குழுவினர் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.