கரூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கரூர் பேருந்து நிலையத்தில் பலகார கடை மாஸ்டர் கைது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) இவர்கள் பேருந்து நிலையத்திற்கு உள்ள பலகார கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ் மனைவி அம்சா (32) என்பவருடன் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (35)(திருமணமாகவில்லை) என்ற கூலித் தொழிலாளி கடந்த 5 வருடங்களாக தகாத உறவில் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ரமேஷ் கரூரில் வேலை முடித்துவிட்டு இரவு 9.00 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது, ரமேஷ் மனைவியுடன் தொடர்பில் இருந்து வரும் சிவக்குமார் வீட்டில் இருப்பதைக் கண்டவுடன் வாய் தகறாரில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் சிவக்குமாரின் பின் தலையில் அடித்தும், இடது தோல் பட்டையில் குத்தியதில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில், கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ரமேஷ் க.பரமத்தி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவக்குமார் உடலை கைப்பற்றி கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, கணவர் ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.